செய்திகள்

‘பகாசூரன்’ இயக்குநரின் அடுத்த படம் குறித்த அப்டேட்!

இயக்குநர் மோகன்.ஜி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.  

DIN

திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய பிரபலமானவர் மோகன்.ஜி. அடுத்து பகாசூரன் என்ற படத்தை இயக்கினார். அதில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாகவும் ஒளிப்பதிவாளர் நட்டி என்னும் நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் படத்தின் கதையை அமைத்துள்ளனர். இந்தப்படம் பிப்.17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.கலவையான விமர்சனங்களை பெற்றாலும் செல்வராகவனின் நடிப்பை திரைப் பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். 

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் இயக்குநருக்கு ரூ.5 இலட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை பரிசாக அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தற்போது தனது அடுத்தப்படத்தின் கதாநாயகரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருந்ததாவது: 

சில மீடியாக்களுக்கு...இவரு யாருன்னு தெரியுதா..காசி கங்கா ஆர்த்தியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி சார்.. நீங்களா எதாவது கிளப்பி விடாதீங்க.. அப்பறம் முக்கியமான செய்தி.. என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் சார் தான் .. அறிவிப்பு விரைவில்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT