செய்திகள்

’சூர்யா 42’ வெளியீடு எப்போது?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 42’ படத்தின் வெளியீடு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 42’ படத்தின் வெளியீடு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.

நிகழ்காலம் கலந்து வரலாற்று பின்னணியில்  3டி தொழில் நுட்பத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை 10 மொழிகளில் இரண்டு பாகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுதான் சூர்யாவின் அதிகபட்ச பட்ஜெட் படமென்பதும் குறிப்பிடத்தக்கது.

கோவா மற்றும் பிஜூ தீவில் நடைபெற்ற படப்பிடிப்புகள் முடிவடைந்ததுள்ளது. அதைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவுள்ளது.

இந்நிலையில்,  இப்படத்தை 2024 பொங்கல் பண்டிகைக்கு வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

றெக்கை இல்லாத தேவதை... கீர்த்தி சனோன்!

எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!

உயிர்த்தெழும் ஓவியமே... ப்ரீத்தி சர்மா!

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

SCROLL FOR NEXT