முகப்பு
செய்திகள்

‘பத்து தல’ புதிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:37 AM
பகிர்:


கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். 

கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. படக்குழு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. கௌதம் கார்த்திக் பெயருடன் சிம்புவின் பெயரும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. 

உலகமெங்கும் இந்தத் திரைப்படம் 2023ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் வெளியாக உள்ளது.  

தற்போது மார்ச் 3ஆம் தேதி ஆச்சரியம் உள்ளதாக புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.