செய்திகள்

கவின் படத்தினை வெளியிடும் உதயநிதி: ரிலீஸ் எப்போது தெரியுமா?

நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாடா’ படத்தின் ரிலீஸ் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

DIN

சின்னத்திரை தொடர்களில் நடித்துவந்த கவின், நட்புனா என்னனு தெரியுமா படத்தில் நாயகனாக நடித்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். 

தொடர்ந்து அவர் நடித்த லிஃப்ட் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரிப்பில் ஊர் குருவி என்ற படத்தில் கவின் நடித்துள்ளார். விரைவில் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கடாரம் கொண்டான் படத்தினை இயக்கிய கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ‘டாடா’ படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடிக்க, பாக்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ்  உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஜென் மார்டின் இசையமைக்க, எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT