தொலைக்காட்சித் தொடர்களில் இருந்து நடிகையாக பிரியா பவானி ஷங்கர் மேயாத மான் படத்தில் அறிமுகமானார். பின்னர் முக்கியமான நடிகையாக உருமாறியுள்ளார்.
தற்போது அவரிடம் 9 படங்கள் கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அகிலன், பத்து தல, ருத்ரன், டீமாண்டி காலணி 2, கல்யாணும் காமினியும், பொம்மை, இந்தியன் 2, பெயரிடப்படாத தெலுங்கு படமொன்றும் இதில் அடங்கும். இதில் பல படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.உலகமெங்கும் இந்தத் திரைப்படம் 2023ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வ அறிவித்தது.
இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் தனது டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
பத்து தல படத்தின் டப்பிங் முடிந்தது. ஜாலியான மறக்கமுடியாத அனுபவத்தை கொடுத்த இயக்குநர் மற்றும் படக்குழுவுக்கு நன்றி. மகிழ்ச்சியாக இந்தப் புத்தாண்டை தொடங்குவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.