செய்திகள்

தேசிய விருது பெற்ற இயக்குநரின் படத்தில் சரத்குமார்! 

நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆழி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

DIN

90களில் முன்னணி நடிகராக இருந்தவர் சரத்குமார். பின்னர் இரண்டாயிரத்துக்குப் பிறகு துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடைசியாக 2017இல் சென்னையில் ஒருநாள் 2 படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

தற்போது 888 புரடக்‌ஷன் செல்லுலாய்டு கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மலையாளத்தில் தேசிய விருது பெற்ற இயக்குநர் மாதவ் ராமதாசன் இயக்கத்தில் சரத்குமார் நடித்துள்ளார். 

ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி இதில் இணைந்துள்ளார். ஆன்ந்த் நாயர் ஒளிப்பதிவில் ஜெஸ்சி கிப்ட் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT