முகப்பு
செய்திகள்

துணிவு வெளியீடு எப்போது? ‘வாரிசு’ டிரைலருக்காக காத்திருக்கும் போனி கபூர்!

பொங்கலுக்கு வெளியாகவுள்ள அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்களின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2023 at 3:04 PM
பகிர்:

பொங்கலுக்கு வெளியாகவுள்ள அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்களின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.  

துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், இன்னும் இரு படங்களின் வெளியீட்டுத் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Advertisement

அதேநேரம், துணிவு டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், துணிவு படம் ஜன.12 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் விரைவில் விஜய்யின் வாரிசு பட டிரைலரும் வெளியாகும் என்பதால் அதனை பார்த்தபின் துணிவு வெளியீட்டுத் தேதியை போனி கபூர் உறுதிசெய்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு திரைப்படம் ஜன.12 ஆம் தேதி கிட்டத்தட்ட வெளியாகும் என்பதால் ‘துணிவு’ நேரடியாக மோதவே அதிக வாய்ப்புகள் உள்ளன!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.