’விடுதலை’ வெளியீடு எப்போது?
விடுதலை திரைப்படத்தின் வெளியீடு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலை திரைப்படத்தின் வெளியீடு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
‘அசுரன்’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார்.
இப்படத்தில் நடிகர் சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைப்பில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
Advertisement
இந்நிலையில், இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் மார்ச் 31 ஆம் தேதியும் இரண்டாம் பாகம் ஜூலை மாதத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.