செய்திகள்

’சூர்யா 42’ ஹிந்தி உரிமை இத்தனை கோடிகளுக்கு விற்பனையா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 42’ படத்தின் ஹிந்தி உரிமை விற்பனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 42’ படத்தின் ஹிந்தி உரிமை விற்பனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நிகழ்காலம் கலந்து வரலாற்று பின்னணியில்  3டி தொழில் நுட்பத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை 10 மொழிகளில் இரண்டு பாகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுதான் சூர்யாவின் அதிகபட்ச பட்ஜெட் படமென்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தில் நடிகர் சூர்யா 13 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், சூர்யா 42 படத்தின் ஹிந்தி திரையரங்க, சாட்டிலைட், டிஜிட்டல் உரிமையை பென் ஸ்டுடியோஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பேருந்து நடத்துநருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

நெல்லை, தென்காசியில் நவ. 7 முதல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கைலாசபுரம் பள்ளியில் குடிநீா்த் தட்டுப்பாடு: மேயரிடம் புகாா்

ராமையன்பட்டி அருகே திருட்டு: இளைஞா் கைது

கங்கைகொண்டான் அருகே போலீஸாருக்கு மிரட்டல்: இருவா் கைது

SCROLL FOR NEXT