செய்திகள்

'கயல்' தொடரை முந்தும் 'எதிர்நீச்சல்'!

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' தொடருக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. 

'எதிர்நீச்சல்' தொடரின் முன்னோட்டத்தை (புரோமோ) வெளியிட வேண்டும் என 'கயல்' தொடரின் முன்னோட்ட விடியோவில் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருவது சமூகவலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடரின் முன்னோட்டம் இன்று (ஜன. 5) வெளியானது. அதில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வரும் எழில் குறித்து பலர் கேட்டிருந்தனர். 

'கயல்' தொடரில் வில்லன் கதாபாத்திரத்தில் பெரியப்பா பாத்திரம் செயல்பட்டு வருகிறது. சொந்த தம்பி மகளான, நாயகி கயலுக்கும் அவரின் குடும்பத்துக்கும் இடர்பாடுகளை ஏற்படுத்துவதையே அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த இடர்களை ஒவ்வொரு முறையும் வென்று குடும்பத்தைக் காக்கிறார் 'கயல்'. 

இதனிடையே இன்று வெளியான முன்னோட்ட விடியோவிலும் பெரியப்பா கதாபாத்திரத்தை துணிந்து கேள்வி கேட்கும் வகையில் 'கயல்' பாத்திரத்தின் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு ரசிகர்கள் பலர் விருப்பங்களைத் தெரிவித்திருந்தனர். 

மேலும், 'எதிர்நீச்சல்' தொடரின் முன்னோட்ட விடியோவை வெளியிட வேண்டும் எனவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 'கயல்' தொடரின் முன்னோட்ட விடியோவில் 'எதிர்நீச்சல்' தொடருக்கான முன்னோட்ட விடியோவை ரசிகர்கள் கேட்டத் தொடங்கியுள்ளனர். 

'கோலங்கள்' தொடரை இயக்கிய திருச்செல்வம் 'எதிர்நீச்சல்' தொடரை இயக்கி வருகிறார். நடிகையும் வசனகர்த்தாவுமான ஸ்ரீவித்யா வசனங்களை எழுதுகிறார்.  குடும்பப் பெண்மணிகளை மட்டுமல்லாமல், இளைஞர்களைக் கவரும் வகையில், அந்த தொடரின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதால், அதற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. 

மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிபிரியா இசை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ''எதிர்நீச்சல்'' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT