வலிமை திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூலை துணிவு திரைப்படம் ஒரே நாளில் முறியடித்து சாதனை படைத்துள்ளது.
அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இரு படங்களும் ஒரே நாளில் மோதிக்கொண்டதால் இருவரின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
குறிப்பாக, துணிவு திரைப்படம் நள்ளிரவில் வெளியானதால் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் முந்தியடித்துக்கொண்டு குவிந்தனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் குவிந்ததால் பொதுச்சொத்துக்களுக்கு சேதங்களும் ஏற்பட்டன.
அதனைத் தொடர்ந்து வாரிசு அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இதையும் படிக்க: ’துணிவு - வாரிசு’ முதல்நாள் வசூலில் இவர்தான் நம்.1!
மேலும், தமிழகத்தில் முதல்நாள் வசூலில் துணிவு திரைப்படம் ரூ.17.5 கோடியையும் வாரிசு திரைப்படம் ரூ.17 கோடியையும் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் துணிவு திரைப்படம் ஒரே நாளில் 4 லட்சம் டாலர்கள்(3.3 கோடி) வசூலித்துள்ளதாகவும் இது மிகப்பெரிய வசூல் சாதனை என்றும் இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையைப் பெற்ற சரிகம நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் வலிமை ஒட்டுமொத்தமாக 1.25 லட்சம் டாலர்களே( 1.1 கோடி ) வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.