வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழில் வெளியாது. வாரிசு படத்தின் முன்பதிவும் பல்வேறு திரையரங்குகளில் தொடங்கிய உடனேயே முடிவடைந்துவிட்டது. குடும்ப பொழுது போக்காக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தற்போது தெலுங்கில் வாரசுடு வெளியாகியுள்ளது. சங்கராந்தியை முன்னிட்டு இந்தப் படம் உலகம் முழுவதும் இன்று (ஜன.14) வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: உண்மைக் கதையில் நடிக்கும் ரம்யா பாண்டியன்- ஆரவ்!
ரஞ்சிதமே பாடல் லிரிக்கல் விடியோ யூடியூபில் 100 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. இதில் அதிரடியாக நடனமாடியுள்ளார் விஜய். இந்தப் பாடலுக்கு திரையரங்குகளில் ரசிகர்கள், குழந்தைகள்கூட நடனமாடுகிறார்கள். குழந்தைகள் நடனமாடும் விடியோவை இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீடிவீட் செய்து, “வாரிசு பிளாக் பஸ்டர்” என பதிவிட்டுள்ளார்.
இதுவரை உலகம் முழுவதும் ரூ.100 கோடியை எட்டியுள்ளதாக ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. இருப்பினும் இன்னும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. தெலுங்கிலும் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் வாரிசு மற்றும் வாரிசுடு உலகம் முழுவதும் இன்று 100 கோடிக்கும் மேல் வசூலாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் ரஞ்சிதமே பாடல் ஒலிக்கும் போதெல்லாம் சிசு வயிற்றில் அசைவதாக கூறியுள்ளார். இதனைப் பகிர்ந்த தமன், “இது ஒரு தெய்வீக உணர்ச்சி. இந்த நாளை எனதாக்கியது” என பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.