ஜெயம் ரவியின் ‘இறைவன்’ தோற்றப் போஸ்டர் வெளியீடு
ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘இறைவன்’ திரைப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘இறைவன்’ திரைப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும் ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் இறைவன். இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
என்றென்றும் புன்னகையின் இயக்குநர் ஐ. அஹமது இயக்கத்தில் உருவான இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
‘இறைவன்’ மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.