முகப்பு
செய்திகள்

தமிழில் வெளியாகிறது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’

நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:43 PM
பகிர்:

நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது.

ஆமேன், அங்கமாலி டைரிஸ், ஈமாயூ, ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவரது ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தற்போது மம்மூட்டி முதன்மை வேடத்தில் நடித்துள்ள நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ளார். இதில் மறைந்த நடிகர் பூ ராமு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 

இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், ஜன.19 ஆம் தேதி இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை மம்மூட்டி கம்பெனி நிறுவனமும் ஆமென் மூவி மோனஸ்டெரி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →