செய்திகள்

பிக் பாஸிலிருந்து பணப்பெட்டியுடன் வெளியேறினார் கதிரவன்!

பிக் பாஸ் சீசன் 6 போட்டியிலிருந்து 100-வது நாளில் பணப்பெட்டியுடன் கதிரவன் வெளியேறினார்.

DIN

பிக் பாஸ் போட்டியிலிருந்து 100-வது நாளில் பணப்பெட்டியுடன் கதிரவன் வெளியேறினார்.

பிக் பாஸ் சீசன் 6 போட்டியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இறுதி வாரத்தில் 6 பேர் மட்டுமே தகுதிபெற்றனர். இன்னும் 4 நாள்களில் இந்த சீசன் முடிவடையவுள்ளது.

இந்நிலையில், நேற்று பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இறுதி வாரத்தில் உள்ள 6 போட்டியாளர்களில் ஒருவர் கொடுக்கப்பட்டுள்ள பணத்துடன் வெளியேற விருப்பப்பட்டால் வெளியேறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

பணப்பெட்டியில் எவ்வளவு உள்ளது என்று டிஸ்பிளே செய்யப்பட்டிருந்தது. சிறிது நேரத்திற்கு ஒருமுறை பணம் தொடர்ந்து அதிகரிக்கப்படும் என்பது வழக்கமான நிகழ்வு. கடந்த காலங்களில் ஒரு லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று தொடக்க தொகையாக ரூ. 3 லட்சம் டிஸ்பிளே செய்யப்பட்டது. அடுத்த கட்டத்திற்கு செல்வதற்குள் கதிரவன் குறைந்தபட்ச தொகையான ரூ. 3 லட்சத்தை எடுத்துக் கொண்டு செல்வதாக அறிவித்துவிட்டார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சக போட்டியாளர்கள் சிறிது நேரம் பொருத்திருந்தால் பணம் அதிகரித்திருக்கும் எனப் புலம்பத் தொடங்கினர்.

கதிரவன் வெளியேறிய நிலையில் பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு தற்போது அஷீம், விக்ரமன், சிவின், மைனா, அமுதவாணன் ஆகிய 5 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

இவர்களில் யார் வெற்றியாளர் என்பது இன்னும் 4 நாள்களில் தெரிந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT