செய்திகள்

அஞ்சலியின் ‘ஜான்சி 2’ இணைய தொடர் வெளியானது!

அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ஜான்சி இணைய தொடர் இரண்டாம் பாகம் இன்று அதிகாலை வெளியானது.

DIN

அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ஜான்சி இணைய தொடர் இரண்டாம் பாகம் இன்று அதிகாலை வெளியானது.

நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜான்சி இணைய தொடரின் முதல் பாகம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் டிஸ்னி பிளஸ் ஓடிடியில் வெளியானது.

திரு மற்றும் கணேஷ் கார்த்திக் இயக்கிய இந்த தொடரில், சாந்தினி சவுத்ரி, ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, ராஜ் அர்ஜுன், அபிராம் வர்மா, ராமேஸ்வரி டல்லூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடக்கும் அநீதிகளையும், போதைப் பொருள்களின் தாக்கத்தையும் அடிப்படையாக கொண்டு கிரைம் த்ரில்லராக வெளியான ஜான்சி முதல் பாகத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

முதல் பாகத்தில் மொத்தம் 10 அத்தியாயம் மட்டுமே இருந்த நிலையில் இன்று 4 அத்தியாயம் கொண்ட இரண்டாம் பாகம் டிஸ்னி பிளஸ் ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது.

நவரசா, ஃபால், ஜான்சி என அடுத்தடுத்து இணைய தொடர்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார் அஞ்சலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT