முகப்பு
செய்திகள்

கமல்ஹாசன் படத்தில் ஷாருக்கான், மம்மூட்டி?

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 20 ஜனவரி, 2023 at 12:52 PM
பகிர்:

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, அவருடைய அடுத்ததடுத்த படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

அந்தவகையில், ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் மணிரத்னம் - கமல்ஹாசன் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Advertisement

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. 

அதன்படி, கமல்ஹாசனின் 234- வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார். படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 2024 ஆம் ஆண்டு படம் வெளியாகவிருக்கிறது. 

இந்நிலையில், பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில்   கமலுடன் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், மம்மூட்டி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.