செய்திகள்

ஷாருக்கான் யார் என கேட்ட முதல்வர்!

ஷாருக்கான் யார் என அசாம் மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா கேட்டுள்ளார்.

DIN

ஷாருக்கான் யார் என அசாம் மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா கேட்டுள்ளார்.

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் இதனை தெரிவித்தார். ஷாருக்கான் குறித்தும் அவரது பதான் படம் குறித்தும் தனக்கு எதுவும் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார். 

ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் பதான் படம் திரையிடப்பட்டதுக்கு எதிராக பஜ்ரங் தால் செயற்பாட்டாளர்கள் வன்முறையில் ஈடுபட்டது குறித்தும், திரைப்பட பதாகைகளை கிழித்தெறிந்து தீ வைத்தது குறித்தும் ஹிமந்த விஸ்வ சர்மாவிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அசாம் முதல்வர் கூறியதாவது: இந்த பிரச்னை குறித்து பாலிவுட் பிரபலங்கள் பலர் என்னை தொடர்பு கொண்ட போதிலும், ஷாருக்கான் என்னை அழைக்கவில்லை. ஆனால், அவர் அழைத்தால் இந்த விஷயத்தில் நான் தலையிட்டு என்ன பிரச்னை என்பதை பார்ப்பேன். சட்ட ஒழுங்கு மீறப்பட்டிருந்தால், சட்டத்தினை மீறியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பதான் திரைப்படம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT