கோப்புப்படம் 
செய்திகள்

பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் யார்?

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வெற்றியாளரை காண பார்வையாளர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்

DIN

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வெற்றியாளரை காண பார்வையாளர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6-வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இதற்கிடையில் சமீபத்தில் கதிரவன் பணப்பெட்டி டாஸ்க்கில் 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார். இவரைத் தொடர்ந்து 11,75,000 பணத்தை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியேறினார்.

பின்னர், பிக் பாஸ் சீசன் 6-ல் முதல்முறையாக மிட் வீக் எவிக்சன்  நடத்தப்பட்டது. இதில் அதிர்ச்சிகரமாக மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார். தற்போது விக்ரமன், அஷீம், சிவின் மூவர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

வெற்றியாளர் இன்று அறிவிக்கப்படுவார். அவருக்கு ரூ. 50 லட்சமும், இரண்டாவது வெற்றியாளருக்கு ரூ. 25 லட்சமும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

சிவின் மற்றும் விக்ரமனுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமுள்ள நிலையில் இவர்கள்தான் முதல் இரண்டு இடங்களை பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும்.

மக்களின் வாக்குகள் அடிப்படையிலேயே வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், கடைசி நிமிடத்தில்கூட கணிப்புகள்  மாற வாய்ப்புள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளில் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் தொடக்கம்

தென்காசியில் மகளிா் குழுவினருக்கு ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரியாா் எங்கும், என்றும் நிலைத்திருப்பாா்: முதல்வா்

வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமான வரித் துறை சோதனை

SCROLL FOR NEXT