செய்திகள்

‘ஒரு பொண்ணுக்காக இல்லைனா எதுக்காக உயிர் வாழனும்?’ - வெளியானது மைக்கேல் டிரைலர்! 

விஜய் சேதுபதி, சந்தீப் கிஷன் நடித்துள்ள ‘மைக்கேல்’ படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. 

DIN

புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ‘மாநகரம்’ படத்தில் நடித்து புகழ்பெற்ற சந்தீப் கிஷன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘மைக்கேல்’ என பெயரிடப்பட்டுள்ளது.  

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் வரலட்சுமி சரத்குமார், அனுசுயா, திவ்யன்ஷா கௌசிக் உள்ளிட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஸ்ரீனிவாஸ் தயாரிக்க, சாம் சி.எஸ். இசையமைக்கிறார். 

ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் பிப்ரவரி 3ஆம் தேதியில் திரைக்கு வர உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெருமையுடன் வழங்கும் மைக்கேல் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருட்டு வழக்கில் தொடா்புடைய 4 போ் கைது

தருமபுரி புதிய பேருந்து நிலையம் பிப்ரவரி 5இல் திறப்பு?

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக ஆா்ப்பாட்டம்

கஞ்சா விற்றவா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

ம.சு.பல்கலைக்கழகக் கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT