செய்திகள்

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் பட்டியல்!

DIN

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் பட்டியல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்வு குக் வித் கோமாளி. மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகவுள்ளது. சமையல் போட்டியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், வரும் சனிக்கிழமை(ஜன.28) முதல் குக் வித் கோமாளி போட்டி ஒளிபரப்பபடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக பங்கேற்கின்றனர். ரக்சன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிகிறார்.

இந்நிலையில், கடந்த சீசன்களில் கோமாளியாக பங்கேற்று மக்களின் மனதை கவர்ந்த பாலா, புகழ், சிவாங்கி ஆகியோர் தற்போது திரைப்பட வாய்ப்பு கிடைத்து பிஸியாக நடித்து வருவதால் அவர்கள் மூவரும் பங்கேற்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர். இதற்கு முந்தைய சீசன்களில் இருந்த புகழ், பாலா, ஷிவாங்கி, பவித்ரா போன்றவர்கள் வெள்ளித் திரையில் படங்களில் நடித்து வருகின்றனர். 

மேலும், புதிய கோமாளிகளாக பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, சின்னத்திரை நடிகை ரவீனா தாகா, சுனிதா, மணிமேகலை உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், குக்குகளாக தொகுப்பாளினி அர்ச்சனா, பிக்பாஸ் பிரபலம் தாமரைச் செல்வி, நடிகை வாசுகி, விசித்ரா, விஜயலட்சுமி, அகத்தியன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் உறுதியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT