செய்திகள்

பள்ளி நண்பரை மணக்கிறாரா கீர்த்தி சுரேஷ்? தாய் மேனகா விளக்கம்

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த வதந்திக்கு அவரது தாயார் மேனகா சுரேஷ் விளக்கமளித்துள்ளார் .

DIN

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த வதந்திக்கு அவரது தாயார் மேனகா சுரேஷ் விளக்கமளித்துள்ளார் .

மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பிறகு  விஜய், சூர்யா, ரஜினி போன்ற முன்னிணி நடிகர்களின் படங்களிலும் நடித்தார். 

இதனிடையே நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில தினங்களுக்கு முன்பு இணையதளங்களில் தகவல்கள் பரவின. கீர்த்தி சுரேஷ், தனது பள்ளி நண்பரை காதலிப்பதாகவும், இந்த காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இருவருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெற உள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த வதந்திக்கு அவரது தாயார் மேனகா சுரேஷ் விளக்கமளித்துள்ளார். இது முழுக்கப் பொய்யான செய்தி எனத் தெரிவித்துள்ள அவர் இது தொடர்பாக பேசுவதற்கு எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT