முகப்பு
செய்திகள்

மீண்டும் சிவா இயக்கத்தில் சூர்யா?

கங்குவா  திரைப்படத்திற்குப் பின் சிவா இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 ஜூலை, 2023 at 12:44 PM
பகிர்:

கங்குவா  திரைப்படத்திற்குப் பின் சிவா இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'அண்ணாத்த' படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisement

இதன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

மேலும், கங்குவா படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்காக நடிகர் சூர்யா உடல் எடையைக் கூட்டுவதற்காக உடல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இப்படம் முடிந்தததும் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.