சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்குர்?
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்குர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்குர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்கார் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அவர் அடுத்து விஜய்யுடன் படம் இயக்குவதாக இருந்தது. பின்னர் அந்த பேச்சுவார்த்தை கைவிடவே தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முருகதாஸின் கடைசிப் படமான தர்பார் படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்கும் மோசமான விமர்சனங்கள் எழுந்தது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படம் முடிந்ததும் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளதாகவும், பான் இந்தியப் படமாக உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இதையும் படிக்க: மாவீரன் டிரைலர் நாளை!
ஆனால், மாவீரன் முடிந்ததும் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் இணையும் படத்திற்கு மிருணாள் தாக்குரை நாயகியாக ஒப்பந்தம் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான தோற்றப் புகைப்படங்களும் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.