செய்திகள்

அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி: டிரைலர் அப்டேட்! 

நடிகை அனுஷ்கா நடித்துள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் டிரைலர் எப்போதென படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. 

DIN

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணியாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழில் ரஜனிகாந்த், அஜித், விஜய், சூர்யா என பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார். குறிப்பாக பாகுபலி திரைப்படத்தின் வெற்றி அனுஷ்காவை இந்திய அளவில் பிரபலமான நடிகையாக்கியது. 

சமீபகாலமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா தற்போது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப்படம் அனுஷ்காவின் 48வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

நிரவ் ஷா ஒளிப்பதிவில் பி.மகேஷ்பாபு இயக்கத்தில் அனுஷ்கா, நிவின் பாலிஷெட்டி இணைந்து நடிக்க உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய போஸ்டரை வெளியிட்டு அறிமுகப்படுத்துனார்கள். இந்த போஸ்டரில் சமையல் கலைஞராக இருக்கும் படம் வெளியாகியது. அதிக நாள்கள் ஆனாலும் இன்னும் அதேபோல் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்தனர். 

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்தப் படத்தில் நவீன் பாலிஷெட்டி, அனுஷ்கா ஷெட்டி, ஜெய சுதா, முரளி ஷெர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மகேஷ் பாபு இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் டிரைலர் நாளை மதியம் 1.35 மணிக்கு படக்குழு தெரிவிக்க உள்ளதாக புதிய போஸ்டர் ஒன்றினை வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT