முகப்பு
செய்திகள்

சமந்தா- விஜய் தேவரகொண்டா இணைந்துள்ள குஷி படத்தின் புதிய அப்டேட்!  

நடிகை சமந்தாவுடன் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துவரும் குஷி படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:15 PM
பகிர்:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பின்னர் அதிலிருந்து மீண்டு, பின்னர் படங்களில் நடித்து வருகிறார்.

யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஷிவ நிர்வாணா இயக்கி வருகிறார். ஹீஷம் அப்துல் வாஹித் இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி 70 மில்லியன் (7 கோடி) பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பினை பெற்றுவரும் நிலையில் இரண்டாவது பாடல் பற்றி படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

“முதல் பாடல் ஆக்கிரமித்தது போதும் இரண்டாவது பாடலுக்கும் வாய்ப்பளியுங்கள். விரைவில் வரும்” என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், திரைப்படம் செப்.1ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.