செய்திகள்

ஜெயிலர்: தமன்னாவின் காவாலா பாடல் ஜூலை 6-ல் வெளியீடு

ஜெயிலர் படத்தின் முதல் பாடலான தமன்னாவின் காவாலா பாடல் ஜூலை 6-ல் வெளியாகவுள்ளது.

DIN

ஜெயிலர் படத்தின் முதல் பாடலான தமன்னாவின் காவாலா பாடல் ஜூலை 6-ல் வெளியாகவுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோர் இடம்பெற்ற டீசரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 

இப்படம் ஆகஸ்ட்  10-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா வருகிற ஜூலை மாத இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே தெரிவித்த நிலையில், தாமதமாக 7 மணிக்கு வெளியானது.

ஜெயிலர் படத்தில் காவாலா எனத் தொடங்கும் பாடலின் முன்னோட்டம் இன்று வெளியான நிலையில், இப்பாடல் ஜூலை 6 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT