நயன்தாரா 
செய்திகள்

பிரபல யூடியூபர் இயக்கத்தில் நயன்தாரா!

பிரபல யூடியூபர் இயக்கும் முதல் படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பிரபல யூடியூபர் இயக்கும் முதல் படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகின்றது.

தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள இறைவன் திரைப்படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. மேலும், பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், கதாநாயகியை மையமாக கொண்ட கதையில், பிரபல யூடியூபர் டுயூட் விக்கியின் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 14-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழும் நயன்தாரா, யூடியூபரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT