முகப்பு
செய்திகள்

குருதித் துயர் படிந்த வரலாற்றை இயக்குகிறேன்: சசிகுமார்

புதிய படமொன்றை இயக்க உள்ளதாக சசிகுமார் தெரிவித்துள்ளார்.

Updated On : 4 ஜூலை, 2023 at 4:49 PM
பகிர்:

சசிகுமார் இயக்கத்தில் நடிகர்கள் ஜெய், சமுத்திரகனி, சுவாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘சுப்ரமணியபுரம்’. கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான இப்படம் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 

தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் விமர்சகர்களால் சிறந்த படங்களில் ஒன்றாக ‘சுப்ரமணியபுரம்’ கருதப்படுகிறது. குறிப்பாக, பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காய்ஷப் இப்படத்தைப் பார்த்த உந்துதலில்தான் ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர்’ படத்தை எடுத்தாக தெரிவித்திருக்கிறார்.

சசிகுமார், சமுத்திரகனி மற்றும் ஜெய்யின் திரை பயணத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக இது அமைந்தது.

Advertisement

இந்தப் படம் வெளியாகி 15ஆண்டுகளான நிலையில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தன் முகநூல் பக்கத்தில், “சுப்ரமணியபுரம் வெளிவந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. இன்றுவரை என்னை அரவணைத்திருக்கும் அனைவருக்கும் நன்றியும் அன்பும். இத்தனை வருட காலத்திற்குப் பிறகு இப்பொழுது ‘குருதித் துயர் படிந்த வரலாற்றை’ இயக்கப் போகிறேன்.உங்கள் வாழ்த்துகள் வேண்டி.. அன்புடன் சசிகுமார்” எனப் பதிவிட்டுள்ளார். 

சில ஆண்டுகளாக நடிகராக மட்டுமே கவனம் செலுத்தி வந்த சசிகுமார் மீண்டும் இயக்குநராவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.