செய்திகள்

சின்னத்திரை படப்பிடிப்பு தளத்தில் உருவாகும் படம்!

சீரியல் படப்பிடிப்பு நடத்தப்பட்டுவரும் சின்னத் திரை நடிகருக்குச் சொந்தமான இடத்தில் திரைப்பட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 

DIN

சீரியல் படப்பிடிப்பு நடத்தப்பட்டுவரும் சின்னத் திரை நடிகருக்குச் சொந்தமான இடத்தில் திரைப்பட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 

சின்னத்திரை படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த இடத்தில் தற்போது திரைப்பட படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவதுதான் வளர்ச்சி என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

சென்னை வளசரவாக்கத்தில் சின்னத் திரை நடிகர் ராஜ்கமலுக்கு சொந்தமான படப்பிடிப்புத் தளம் செயல்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்தில் சின்னத்திரை தொடர்கள், இணைய தொடர்கள், நேர்காணல்கள் போன்றவை எடுக்கப்பட்டு வந்தன. 

இதனால் இந்த படப்பிடிப்புத் தளம் எப்போதும் பிரபலங்களின் வருகை நிறைந்ததாகவே காணப்படுகிறது. சன் தொலைக்காட்சியின் செவ்வந்தி, ராதிகா நடித்த சித்தி -2, பொன்னி, எதிர்நீச்சல், ஈரமான ரோஜாவே -2 போன்ற தொடர்களின் படப்பிடிப்பு இங்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது வெள்ளித் திரை சினிமாவையும் உருவாக்கும் இடமாக இத்தளம் மாறியுள்ளது. நடிகர் அபி சரவணன் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் பூஜை இங்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து படபிடிப்பை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. நடிகர் அபி சரவணன் ஏற்கெனவே டூரிங் டாக்கீஸ் மற்றும் சாகசம் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர்.

சின்னத்திரை தொடர்கள் எடுக்க உருவாக்கப்பட்ட இடத்தில் தற்போது வெள்ளித் திரை சினிமாவும் உருவாகிறது என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

கல்லிடைக்குறிச்சியில் எஸ்டிபிஐ பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம்

திசையன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

கால்வாயில் காா் கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு; நால்வா் காயம்

SCROLL FOR NEXT