முகப்பு
செய்திகள்

வெளியானது டிமாண்டி காலனி - 2 மேக்கிங் விடியோ

'டிமாண்டி காலனி 2' படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:18 PM
பகிர்:

திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.

விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது. 

இதனைத் தொடர்ந்து, அருள்நிதி - பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிமாண்டி காலனி 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது.  படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மேக்கிங் விடியோவைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →