சமந்தா (கோப்புப் படங்கள்) 
செய்திகள்

காதல் மூலம் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ளுங்கள்: சமந்தா!

மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர் சிகிச்சைக்காக அடுத்த ஓராண்டுக்கு எந்தவொரு புதிய படங்களிலும் நடிப்பதில்லை என சமந்தா முடிவு செய்துள்ளார். 

DIN

காதல் மூலம் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என நடிகை சமந்தா தத்துவம் பகிர்ந்துள்ளார். 

மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர் சிகிச்சைக்காக அடுத்த ஓராண்டுக்கு எந்தவொரு புதிய படங்களிலும் நடிப்பதில்லை என சமந்தா முடிவு செய்துள்ளார். 

முன்னணி நடிகையான சமந்தா கடந்த சில மாதங்காளாக மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் வெளிநாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். 

இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில், புதிதாக ஒப்பந்தமாகவிருந்த படத்திற்கான முன்பணத்தை தயாரிப்பாளர்களிடம் திருப்பியளித்துள்ளார். சிகிச்சை முழுமையடையும் வரை எந்தவொரு திரைப்படத்திலும் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளார். 

கடந்த சில நாள்களாகவே தேவாலயங்களுக்குச் செல்வது இயற்கையுடன் ஒன்றியிருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுவரும் சமந்தா, சமூக வலைதளத்தில் சிலி நாட்டு எழுத்தாளரின் தத்துவத்தைப் பகிர்ந்துள்ளர். 

அதில், மரணத்தில் இருந்து நம்மை எதுவும் காப்பாற்றாது. எனவே காதல் மூலமாவது வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். திருமண வாழ்க்கையை பாதியில் முறித்துக்கொண்ட சமந்தா, காதல் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் பதிவிட்டுள்ளார். 

நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்த குஷி திரைப்படத்தின் பின்னணி வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தத் திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT