செய்திகள்

சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் வெளியீட்டில் தாமதம்

சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2020ஆம் ஆண்டு நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சூரரைப் போற்று. இந்த படத்திற்கு தேசிய விருதுகளும் வழங்கப்பட்டது.

தமிழில் பெற்ற வரவேற்பை தொடர்ந்து ஹிந்தி ரீமேக்கை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்சய் குமார் நடிக்கிறார். சூர்யா இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.

இதையும் படிக்க | சனா கானுக்கு ஆண் குழந்தை

இப்படத்திற்கு ’ஸ்டார்ட்டப்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல். இந்நிலையில், இந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியாக வேண்டிய இப்படத்தை 2024-ல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகளை முடிக்க கால அவகாசம் தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT