செய்திகள்

அமைதியான இடம், அமைதியான மனம்: 10 இலட்சம் லைக்குகளை பெற்றுள்ள சாய் பல்லவியின் புதிய புகைப்படங்கள்!

நடிகை சாய் பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு அமைதியான இடமென பதிவிட்டுள்ளார். 

DIN

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகை சாய் பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக மலையாளத்தில் பிரேமம் படத்திற்கு கிடைத்த வெற்றியினால் தென்னிந்தியா முழுவதும் நல்ல பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.  நடனத்திற்கென அவருக்கு தெலுங்கில் பல படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது. 

2022இல் சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் விமர்சன ரீதியாக பெறும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் வெளியான விராட பருவம் திரைப்படமும் நல்ல வரவேற்பினைப் பெற்றது. 

தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்.  இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக சாய் பல்லவி காஷ்மீர் சென்றுள்ளதாகவும் ஒரு மாதப் படப்பிடிப்பு முடிந்து இன்னும் 15 நாள்கள் மீதமுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் சாய் பல்லவிம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலைகள், பூக்கள், ஆறுகள் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, “மனதின் நிலை- பேரமைதி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

ரசிகர்கள் இயற்கையுடன் இயற்கையான அழகி என புகழ்ந்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக - தேமுதிக கூட்டணி; கேப்டன் ஆன்மா மன்னிக்காது!: பாஜக | செய்திகள்: சில வரிகளில் | 19.2.2026

இது தெரியுமா? கடலின் நிறம் நீலமாக இருக்கிறதே ஏன்?

வங்கதேச வான்வழியில் பறக்க ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்குத் தடை!

கர்நாடகம் உள்பட 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

இந்த வார ஓடிடி படங்கள்!

SCROLL FOR NEXT