தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் செப்.7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது.
இதையும் படிக்க: டாக்டர் படம் மாதிரி எனது நடிப்பு புதியதாக இருக்கும்: மாவீரன் குறித்து சிவகார்த்திகேயன்!
சமீபத்தில் இப்படத்தின் இசை உரிமத்தை டீ - சீரியஸ் நிறுவனம் ரூ.36 கோடிக்கு வாங்கியுள்ளது. தமிழின் நட்சத்திர நடிகை நயன்தாரா, நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இன்று காலையில் வெளியான ஜவான் படத்தின் முன்னோட்ட விடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது:
முதல் பாலிவுட் படத்திலேயே இப்படியான படத்துடன் வெளிவந்திருக்கும் அட்லியை நினைத்து பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை. சர்வதேச தரத்தில் இருக்கிறது! கடின உழைப்பும் பொறுமையும் தெரிகிறது. அட்லிக்கு எனது சார்பாக மிகுந்த பாராட்டும் அறவணைப்பும்.
எனது தங்கம் நயன்தாராவின் பாலிவுட் அறிமுகமே ஷாருக்கானுடன் இருப்பது கனவு நினைவான மாதிரி. எனது அரசன் அனிருத் சிறப்பாக செய்திருக்கிறார். விஜய் சேதுபதிக்கும் எனது பாராட்டுகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.