செய்திகள்

வெளியானது எல்ஜிஎம் டிரைலர்! 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தயாரிப்பில் உருவாகியுள்ள எல்ஜிஎம் படத்தின் டிரைலர் வெளியானது. 

DIN

தோனியும் அவருடைய மனைவி சாக்‌ஷி சிங் தோனியும் இணைந்து தோனி என்டர்டெய்ன்மெண்ட் என்கிற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார்கள். இதற்கு முன்பாக ‘ரோர் ஆஃப் தி லயன்’ என்கிற சிஎஸ்கே பற்றிய ஆவணப்படத்தையும் ‘வுமன்ஸ் டே அவுட்’ என்கிற குறும்படத்தையும் தயாரித்துள்ளார்கள். 

சிஎஸ்கே அணியின் கேப்டனாக உள்ள தோனி மீது தமிழ் ரசிகர்கள் அதிக அளவிலான அன்பைச் செலுத்தி வருகிறார்கள். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் முதல் படத்தைத் தமிழில் தயாரிக்க முடிவு செய்திருந்தனர் தோனியும் சாக்‌ஷியும். 

ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ‘எல்ஜிஎம்’ (லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற படத்தின் அறிவிப்பு வெளியானது. தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, வினோதினி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளனர்.  

இந்நிலையில் படத்தின் டிரைலர், இசை வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவசமாக வழங்கினால் மக்கள் வேலை செய்வார்களா? - தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகள்!

விழுப்புரம் மாவட்டத்துக்கு பிப்.21ல் உள்ளூர் விடுமுறை!

உலகங்கள் ஒன்றிணையும் போது... ரஜினி - கமல் திரைப்படத்தை தயாரிக்கும் ரெட் ஜெய்ண்ட்!

இந்தியாவின் முதல் வீரர்..! டி20யில் ஹார்திக் பாண்டியாவின் வரலாற்றுச் சாதனை!

செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம்!

SCROLL FOR NEXT