செய்திகள்

சென்னை ரசிகர்களுக்காகவே படம் தயாரிக்கிறேன்: தோனி

சென்னை ரசிகர்களின் அன்பிற்காகவே தமிழ்ப் படத்தை தயாரிப்பதாக தோனி தெரிவித்துள்ளார்.

DIN

தோனியும் அவருடைய மனைவி சாக்‌ஷி சிங் தோனியும் இணைந்து தோனி என்டர்டெய்ன்மெண்ட் என்கிற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார்கள். இதற்கு முன்பாக ‘ரோர் ஆஃப் தி லயன்’ என்கிற சிஎஸ்கே பற்றிய ஆவணப்படத்தையும் ‘வுமன்ஸ் டே அவுட்’ என்கிற குறும்படத்தையும் தயாரித்திருந்தனர். 

சிஎஸ்கே அணியின் கேப்டனாக உள்ள தோனி மீது தமிழ் ரசிகர்கள் அதிக அளவிலான அன்பைச் செலுத்தி வருகிறார்கள். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் முதல் படத்தைத் தமிழில் தயாரிக்க முடிவு செய்திருந்தனர் தோனியும் சாக்‌ஷியும். 

தொடர்ந்து, ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ‘எல்ஜிஎம்’ (லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற படத்தின் அறிவிப்பு வெளியானது. தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, வினோதினி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளனர்.  

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தோனி பேசியபோது, ‘சென்னை எனக்கு மிகவும் பிடித்த இடம். இங்குதான் என் முதல் டெஸ்ட் போட்டியில் கலந்துகொண்டேன். சென்னை ரசிகர்கள் என்னை எப்போதோ தத்தெடுத்துக்கொண்டார்கள். சாக்‌ஷி தயாரிப்பு நிறுவனம் துவங்கலாம் எனச் சொன்னபோது தமிழ்ப் படத்தை எடுக்கச் சொன்னேன். காரணம், சென்னை ரசிகர்கள் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறார்கள். பதிலுக்கு என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன்’ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT