செய்திகள்

வேட்டையாடு விளையாடு - 2 பணிகளில் கௌதம் மேனன்

வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து கௌதம் வாசுதேவ் மேனம் தெரிவித்துள்ளார்.

DIN

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. காவல்துறை அதிகாரியான ராகவன்(கமல்) சந்திக்கிற கொலை வழக்கும் அதன் பின்னணியும் என திரில்லர் பாணியில் உருவான இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில், 16 ஆண்டுகள் கழித்து நவீன மெருகூட்டலுடன்  வேட்டையாடு விளையாடு படம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியானது.

சென்னையில் வெளியான திரைகளில் முதல்காட்சியில் ரசிகர்கள் கொண்டாட்டமாக கண்டுகளித்தனர்.

இந்நிலையில், இப்படம் வெளியான திரையரங்குகள் சனி, ஞாயிறுகளில் ஹவுஸ்புல் காட்சிகளால் நிறைந்து வருகிறது. இதனால், மறுவெளியீட்டிலும் கமல்ஹாசன் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

மறுவெளியீட்டிலும் இப்படம் வசூலைக் குவித்ததால் இப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் கேக் வெட்டி இந்த வெற்றியைக் கொண்டாடினர்.

தொடர்ந்து நேர்காணலில் கலந்துகொண்ட கௌதம் மேனன், ‘வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தின் கதையை கமல் சாரிடம் சொல்லியிருக்கிறேன். அவருக்குப் பிடித்திருந்தது. துருவ நட்சத்திரம் வெளியீட்டுக்குப் பின் இந்தப் பாகத்தின் பணிகளை துவங்க திட்டமிட்டிருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலையற்ற வர்த்தகத்திற்குப் பிறகு, ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

மழை குறுக்கீடு: ஜம்மு காஷ்மீர் 527 ரன்கள் குவிப்பு!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரின் பேரன் மணாலியில் மர்ம மரணம்!

இராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள் 1001 (பாகம் 1, 2)

போத்து

SCROLL FOR NEXT