ஜார்ஜ் லூகாஸ் 
செய்திகள்

ரூ.60,000 கோடி சொத்து.. உலகின் பணக்கார இயக்குநர் இவர்தான்!

உலக பணக்கார இயக்குநர்கள் பட்டியலில் ரூ.60,000 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார் ஜார்ஜ் லூகாஸ்.

DIN

ஹாலிவுட்டின் ஜாம்பவான் இயக்குநர்களான ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி பணக்கார இயக்குநர்கள் பட்டியலில் முதலிடத்தை பெற்று அசத்தியுள்ளார் ஜார்ஜ் லூகாஸ். இவர் 1971 ஆம் ஆண்டு THX 1138 என்கிற படத்தின் மூலம் இயக்குநராக ஹாலிவுட்டில் அறிமுகமானவர். 

அதற்குப் பின், ஸ்டார் வார்ஸ் என்கிற படத்தை எழுதி இயக்கினார். இக்கதை மனிதர்களும் ஜந்துக்களும் வேற்றுகிரகத்தில் வசித்தால் எப்படியிருக்கும் என்கிற கருவைக் கொண்டு உருவானது. தொடர்ந்து, ஸ்டார் வார்ஸ் தொடர்களும் வெளியாகி லூகாஸை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றதுடன் மிகப்பெரிய கோடீஸ்வரராகவும் மாற்றியது.

இந்நிலையில், சமீபத்தில் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பணக்கார இயக்குநர்கள் பட்டியலில் இந்திய மதிப்பில் ரூ.60,000 கோடி சொத்து மதிப்புடன் ஜார்ஸ் லூகாஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் ரூ.32,000 கோடி  சொத்துடன் இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் உள்ளார். அவரை தொடர்ந்து, இயக்குநர் பீட்டர் ஜாக்சன் ரூ.12,000 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் ரூ.8,000 கோடி சொத்து மதிப்புடன் இயக்குநர்கள் டைலர் பெர்ரி மற்றும் ஜேம்ஸ் கேமரூன் ஆகியோர் நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

SCROLL FOR NEXT