செய்திகள்

கார்த்திக்கு வில்லனாக விஜய் சேதுபதி?

நடிகர் கார்த்திக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இப்படம் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதனால், படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விநியோகித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்ததால் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்தது.

இந்நிலையில், இப்பாகத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பி.எஸ்.மித்ரன் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் இப்பாகத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கவும் திட்டமிட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி நடித்து வரும் ஜப்பான் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியே நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், கால் சீட் பிரச்னையால் அவர் விலகிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆற்காடு அருகே ஆம்னி வேன் மோதி கூலி தொழிலாளி பலி

முதல்முறையாக இணையும் விஜய் தேவரகொண்டா - கீர்த்தி சுரேஷ்..! பூஜை புகைப்படங்கள்!

தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம்: காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை

2 நாள்களில் ரூ.10 உயர்ந்த வெள்ளி! தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

புரட்டாசி சனிக்கிழமை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

SCROLL FOR NEXT