செய்திகள்

இங்க நான்தான் கிங்: ரஜினியின் குரலில் ஜெயிலர் பட 2வது சிங்கிள் ப்ரோமா விடியோ

ரஜினியின் குரலில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலுக்கான ப்ரோமா விடியோ வெளியாகியுள்ளது.  

DIN

ரஜினியின் குரலில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலுக்கான ப்ரோமா விடியோ வெளியாகியுள்ளது. 

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார் வில்லனாகவும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் வருகின்றனர். 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அதற்கு முன்பாக இசை வெளியீட்டு விழாவை ஜூலை மாத இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கெனவே படத்திலிருந்து காவாலா பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் 2ஆவது பாடலான ஹூக்கும் எனத் தொடங்கும் பாடல் வரும் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி இன்று ரஜினியின் மிரட்டலான குரலில் படத்தின் இரண்டாவது பாடலுக்கான ப்ரோமா விடியோ வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT