முகப்பு
செய்திகள்

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நந்திதா!

நடிகை நந்திதா ஸ்வேதா அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:04 PM
பகிர்:

தமிழில் அட்டகத்தி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன்பின், எதிர்நீச்சல்,  இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி ஆகிய படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தையும் பெற்றார். 

ஆனால், தொடர்ந்து தன் மார்க்கெட்டை இழந்தவர் தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், நந்திதா ‘பைப்ரோமியால்ஜியா’ என்கிற அரியவகை தசைக் கோளாறு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பேசியபோது, “இந்நோய் காரணமாக உடல் எடை அடிக்கடி குறைகிறது. இதனால், கடினமான வேலைகளைச் செய்வதில்லை. சில சமயம் நகரக்கூட முடிவதில்லை. மேலும், மூட்டு மற்றும் தசைகளில் வலி  ஏற்படுகிறது. வேகமாக நினைவுத்திறனையும் இது பாதிக்கிறது” என வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.