செய்திகள்

பயம் முடியும்போது வாழ்க்கை தொடங்குகிறது: நடிகை வாமிகாவின் வைரல் பதிவு!  

நடிகை வாமிகா கெபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. 

DIN

ஹிந்தி நடிகை வாமிகா கெபி தமிழில் 2016இல் மாலை நேரத்து மயக்கம் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழில் 2023இல் ‘மாடர்ன் லவ் சென்னை’ தொடரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ ஒரு பறவை’ படத்தில் நடித்துள்ளார். 

ஹிந்தி, பஞ்சாபி மொழி படங்களில் அதிகம் நடித்து வருகிறார். சமீபத்தில் அமேசானில் வெளியான ‘ஜூப்ளி’ இணையத் தொடரில் அற்புதமாக நடித்திருந்தார். சோனி லைவிலும் ‘சார்லி சோப்ரா’ எனும் புதிய தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

தற்போது ஜெயம் ரவியுடன் ‘ஜீனி’ படத்தில் நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்துள்ள ‘இரவாக்காலம்’ இன்னும் படம் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது. 

தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “பயம் முடியும்போது வாழ்க்கை தொடங்குகிறது” எனப் பதிவிட்டுள்ளார் வாமிகா. இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்டின்களையும் தீ எமோஜிக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்

எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்

தேசிய பேரிடா் மீட்புப்படைத்தள அலுவலா்களுடன் டிஜிபி ஆலோசனை

SCROLL FOR NEXT