செய்திகள்

தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள்!

சினிமாவுக்கு மெனக்கெடுவதைப்போன்று காதல் காட்சிகள், திருமண காட்சிகள் ஏன் சண்டைக் காட்சிகளும் கூட எடுக்கப்படுகின்றன. இதனால் பலதரப்பட்ட ரசிகர்களை சின்னத்திரை தொடர்கள் பெற்றுள்ளன. 

DIN


தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் அதிக அளவில் ரசிகர்களைக் கவர்ந்து, முதல் 5 இடங்களைப் பிடித்துள்ள சின்னத்திரை தொடர்களைக் காணலாம்.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையைச் சேர்ந்த பலரையும் கவர்ந்து வருகிறது. 

சமீபகாலமாக எடுக்கப்பட்டுவரும் தொடர்கள் குடும்ப கஷ்டங்களையும், மாமியார் மருமகள் கொடுமைகளை விளக்குவதிலிருந்து தப்பி, வேறுபல கோணங்களில் எடுக்கப்பட்டு வருகின்றன. 

பல முற்போக்கு கருத்துகளும் பெண்ணிய உரிமைகளையும் பேசும் தொடர்கள் அல்லது தொடர்களில் இடம்பெறும் காட்சிகள் அதிக அளவில் தற்போது ஒளிபரப்பாகின்றன. 

சினிமாவுக்கு மெனக்கெடுவதைப்போன்று காதல் காட்சிகள், திருமண காட்சிகள் ஏன் சண்டைக் காட்சிகளும் கூட எடுக்கப்படுகின்றன. இதனால் பலதரப்பட்ட ரசிகர்களை சின்னத்திரை தொடர்கள் பெற்றுள்ளன. 

தமிழ் நாட்டில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில், சன் தொலைக்காட்சியின் கயல் தொடர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தத் தொடர் ஆரம்பம் முதலே அதிக ரசிகர்களைப் பெற்றுள்ளது. 

2வது இடத்தில் எதிர்நீச்சல் தொடர் உள்ளது. இந்தத் தொடரில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே ரசிகர்கள் மனதில் பதியும் வகையில் முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டுள்ளன. திருமணமாகிவரும் மருமகள்கள் மூலம் புகுந்த வீட்டுக்கு பாடம் எடுக்கும் தொடராக எதிர்நீச்சல் உள்ளது. 

3வது இடத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வானத்தைப்போல தொடர் உள்ளது. முழுக்க முழுக்க அண்ணன் - தங்கை பாசத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுவரும் தொடர் இது. திருமண வாழ்க்கைக்குப் பிறகு அண்ணன் - தங்கை சந்திக்கும் சவால்களை முதன்மையாக வைத்து பல பாத்திரங்களை உள்ளடக்கி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. 

4வது இடத்தில் விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி தொடரும், சன் தொலைக்காட்சியின் இனியா தொடரும் உள்ளன. இளம் நாயகிகளை வைத்து எடுக்கப்பட்டுவரும் தொடர்களுக்கு மத்தியில் நடுத்தர வயதுடைய பெண்ணை மையப்படுத்தி பாக்கியலட்சுமி தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. இனியா தொடரிலும் பல முற்போக்கு காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 

5வது இடத்தில் சன் தொலைக்காட்சியின் சுந்தரி தொடர் உள்ளது. பெண்ணுக்கு திருமணம் என்பது முக்கியம். திருமணம் ஆன பிறகு கணவன் தவறு செய்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலையிலிருந்து வேறுபட்டு, பெண் கல்வி, பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை மையப்படுத்தி இந்த தொடர் ஒளிபரப்பாகிறது. இதனால், இந்தத் தொடரில் வரும் சுந்தரி பலரைக் கவர்ந்துள்ளார். 

இந்த பட்டியல் டிஆர்பி ரேட்டிங்கை அடிப்படையாக வைத்து வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT