செய்திகள்

ஆங்கிலத்தில் வெளியான கங்குவா க்ளிம்ஸ் விடியோ! 

DIN

அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

மேலும், கங்குவா படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் வில்லனாக ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி(நடராஜ்) நடித்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. 

ஏற்கனவே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகள் அடங்கிய க்ளிம்ஸ் விடியோவை வெளியிட்டனர். வித்தியாசமான கதைப் பின்னணியில் சூர்யாவின் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன. தற்போது ஆங்கில மொழியில் வெளியிட்டுள்ளனர். ஆங்கிலத்தில் பார்க்கும்போது இன்னும் பிரமாண்டமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT