தோனியும் அவருடைய மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து தோனி என்டர்டெய்ன்மெண்ட் என்கிற படத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளனர்.
இதன் முதல் திரைப்படமாக தமிழில் அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ‘லெட்ஸ் கெட் மேரிட்(எல்ஜிஎம்)’ என்கிற படத்தை தயாரித்துள்ளனர்.
இப்படம் வருகிற ஜூலை 28 ஆம் தேதி திரைக்கு வருகிறது. மேலும், தயாரிப்பாளரான சாக்ஷி சிங் தோனி இதற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இதையும் படிக்க: ஓப்பன்ஹைமா் படத்தின் சா்ச்சை காட்சியில் பகவத்கீதை: தணிக்கை குழு விளக்கமளிக்க அறிவுறுத்தல்
இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட சாக்ஷி, ‘யூடியூப்பில் கோல்ட்மேன் புரொடக்ஷன் மூலம் தெலுங்கு படங்களை ஹிந்தியில் பார்த்துள்ளேன். வளர வளர நான் அல்லு அர்ஜுன் நடித்த அனைத்துப் படங்களையும் பார்த்துவிட்டேன். நான் அவரின் தீவிர ரசிகை’ எனத் தெரிவித்துள்ளார். இது, தெலுங்கு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.