சீதா ராமம் வெற்றியை தொடர்ந்து ’கிங் ஆஃப் கோதா’ என்ற புதிய படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவான இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது.
இது பான் இந்தியப் படமாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில், டிவிட்டரில் ரசிகர் ஒருவர், ‘ஏன் சகோதரரே விடியோ பாடலில் நடிக்கிறீர்கள்? நீங்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய படங்களில் அதிகமாக நடிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இதையும் படிக்க: இறுதிக்கட்டத்தை நெருங்கும் வணங்கான் படப்பிடிப்பு!
அதற்கு துல்கர் சல்மான், ‘கலையின் எல்லா வடிவங்களையும் மதியுங்கள். இறுதியில் உண்மையான ஒன்றின் பாகமாக நான் இருக்கிறேன். நீங்களும் உங்களுக்குப் பிடித்த வேலையைப் பிடித்ததுபோல் பண்ணுங்கள். அனுபவம்தானே வாழ்க்கை. அதில் சிறிது, பெரிது என எதுவுமில்லை. இந்த இசை விடியோவின் அனுபவத்தையும் என்னுடன் பணிபுரிந்தவர்களையும் வாழ்நாள் முழுவதும் பாராட்டுவேன். வாழ்வது ஒருமுறை. அனுபவங்களையும் மனிதர்களையும்தானே நாம் எடுத்துச் செல்கிறோம். வாழ்த்துக்கள் சகோதரரே’ எனப் பதிலளித்துள்ளார்.
Respect all mediums and all formats of art. End of the day I’ll be a part of anything original. Irrespective. Neengalum ungalukku pudicha velaiya ungalukku pudicha vidhathila pannunge. Experience thaane vaazhkai. Athile perisu chinnathu-nu onnum illai. I’ll cherish the experience…
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.