செய்திகள்

விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி: ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!

விஜய் டிவியில் தொடங்கவுள்ள புதிய நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

விஜய் டிவியில் தொடங்கவுள்ள புதிய நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனித்துவ நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருப்பது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியின் மூலம் பிரபலமடைந்த ஏராளமானோர் வெள்ளித் திரையில் நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர்.

தற்போது, விஜய் டிவியில் சின்னத் திரைக்கு கதாநாயகியை  அறிமுகப்படுத்தும் புதிய ரியாலிட்டி ஷோ 'கதாநாயகி' ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஜூலை 29 முதல் சனி மற்றும் ஞாயிறு தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், நடிகை ராதிகா சரத்குமார் இணைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை கலக்கப்போவது யாரு பிரபலம் பாலா மற்றும் குரேஷி  தொகுத்து வழங்கவுள்ளனர்.

இதையும் படிக்க: கங்குவா கிளிம்ஸ் சாதனை!

கதாநாயகி நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த புதிய நிகழ்ச்சியை விஜய் டிவி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலை வீசும் கண்ணழகு... ஸ்வேதா குமார்!

ஆஹா என்ன அழகோ... பூனம் பாஜ்வா!

தில்லியில் புதின்! அணிவகுப்பு மரியாதையுடன் ஆரத்தழுவி வரவேற்ற பிரதமர் மோடி!

ஹைதராபாதில் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

AVM தோப்பில் நடப்பட்ட சிறு செடி நான்! AVM Saravanan-க்கு கமல் அஞ்சலி!

SCROLL FOR NEXT