செய்திகள்

காட்ஃபாதர் படம் பார்த்த கமல் - ஏ.ஆர். ரஹ்மான்! 

அமெரிக்காவிலுள்ள ஆஸ்கர் மியூசியத்தில் காட்ஃபாதர் படத்தினை கமல், ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து பார்த்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

DIN

கேங்ஸ்டர் படங்கள் என எடுத்துக்கொண்டால் அதில் 1973இல் வெளியான காட்ஃபாதர் படம்தான் மற்ற கேங்ஸ்டர் படங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் . அந்த அளவிற்கு சிறப்பான படமாக பிரான்சிஸ் போர்ட் கோப்போலா இயக்கிருப்பார். இதில் நடித்த மார்லன் பிராண்டோவிற்கு ஆஸ்கர் விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. 

இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்தார். பின்னர் இருவருமாக சேர்ந்து அமெரிக்காவிலுள்ள ஆஸ்கர் மியூசியத்தில் காட் ஃபாதர் படத்தினை பார்த்தார்கள்.

கமல் காட் ஃபாதர் படத்தினை பார்க்கும் புகைப்படத்தினை பதிவிட்ட ஏ.ஆர். ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைசிறந்த ஒருவரின் படத்தினை பார்க்கும் மற்றுமொரு தலைசிறந்தவர் என பதிவிட்டுள்ளார். இதற்கு நடிகர் அசோக் செல்வன் ரஹ்மானை தலைசிறந்த ஒருவர் இதை கூறியுள்ளாரென கமெண்ட் செய்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கர் விருதுகளை வாங்கிய புகைப்படங்களை பார்வையிடுவது போல பதிவிட்டு, “என்னைவிட வயதான இளைஞரை கண்டுபிடித்தேன். அதனால்தான் நான் இளைஞர்களுடன் தொடர்பில் இருக்கிறேன்” என ரஹ்மானை டேக் செய்து பதிவிட்டுள்ளார். 

கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் எச்.வினோத்துடன் கமல்233 படத்திலும் இயக்குநர் மணிரத்தினம் உடன் கமல் 234 படத்திலும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அலையும் அழகும்... இலங்கையில் ஆண்ட்ரியா!

மும்பை: புறநகர் ரயிலில் இருந்து விழுந்து 3 பயணிகள் காயம்

“உள்ளூரை அறிந்துகொள்ளவே சுற்றுலா”: கார்த்திக் முரளி

இஷான் கிஷன் சதம் விளாசி அதிரடி; நியூசிலாந்துக்கு 272 ரன்கள் இலக்கு!

எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயரா? மத்திய அரசு மறுப்பு!

SCROLL FOR NEXT