செய்திகள்

தமிழில் ரீமேக்காகும் பிரபல தெலுங்கு சீரியல்!

கதாநாயகி யார் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

DIN


தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி மக்களைக் கவர்ந்த தொடர், தமிழ் மொழியில் எடுக்கப்படவுள்ளது. 

ஒருசில தொடர்கள் மொழிமாற்றம் செய்யப்படும் நிலையில், ஒருசில தொடர்கள் காப்புரிமை பெற்று புதிதாக தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப எடுக்கப்படுகின்றன. 

தெலுங்கு மொழியில் ஒளிபரப்பான நுவ்வு நேனு பிரேமா என்ற தொடர் ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் தொடர் இளம் தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் சுவாமிநாதன் ஆனந்தராமன் மற்றும் பவித்ரா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்தனர்.

தமிழுக்கு வரவுள்ள நுவ்வு நேனு பிரேமா தொடர் 

இந்தத் தொடர் தற்போது தமிழ் மொழியில் எடுக்கப்படவுள்ளது. இதிலும் சுவாமிநாதன் ஆனந்தராமன் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர், தமிழில் காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்தவர். 

இவருக்கு ஜோடியாக யார் நடிக்கவுள்ளார் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT